
யாராவது
யாரோடவாவது
பேசத்தான்
விரும்புகிறார்கள்...!
மௌனமாய்
மனதிற்குள்
யாரும்
இருப்பதில்லை...!
அடுத்து
வந்தால்
ஆஸ்தி
கேட்ப்பார்களோ...
என்றொரு
அவஸ்தையோடு...,
சாலைகளில்
சந்திக்கையில்
மௌனமாய்...
ஒரு
புன்னகையோடு
புதைக்கிறார்கள்
மனிதநேயத்தை...!
இருந்தாலும்
யாராவது
யாரோடவாவது
பேசத்தான்
விரும்புகிறார்கள்...!
உண்மைதான்..
பதிலளிநீக்கு