புதன், 28 ஜூலை, 2010

ஒருதலைக்காமம்...



உன்னோடுகொண்ட
ஒருதலைக்காமம்...

சிந்தனைகளையும்
சிற்றின்பத்தையும்
சிதறடிக்கிறது....

உன் காதல்
சேரும்போது
என் காமம்
வெடிக்கும்...

தூங்காமல்
விழித்தபின்
என்
தலையணை
பிழிந்தால்

என்னால்
எழுதப்பட்ட
காதல்
கண்ணீர்
கவிதைகள்...

வெட்கமாயிருக்கிறது
ஒருசில
நொடிகளின்
காமத்திற்கு
காதலென்று சொல்ல....

என்றாலும்
கற்புடைய
சமூகத்தில்

என் காமமும்
உன் காமும்
ஜோடனை
வார்த்தைகளால்
காதலாகட்டுமென்று...

காத்திருக்கிறேன்.
உன் காமம் சேர..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக