வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

The Conjuring - பேய்களின் திருவிளையாடல்






அமெரிக்க திரைப்பட வரலாற்றில் அவ்வப்போது குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்து வரும்.







அந்த வரிசையில் இந்த பேய் படம் சேரும்.







BURUNEI யில் நேற்றுதான் திரையிடபட்டது , தனியாய் சென்று பயப்பட முடியாததால் நாலு பேர் சேர்ந்து நடுநிசி காட்சிக்கு போனோம் .



ஏர்போர்ட் மாலில் நல்ல கூட்டம் , அரங்கு நிறைந்து திரைக்கு முன் வரிசையில்தான் இடம் கிடைத்தது .

கதை விமர்சனம் கிடையாது ,பயப்பட விரும்புபவர்கள் பார்த்து பயந்து கொள்ளுங்கள் .
 ஒரு வீடு , 11 ஆட்கள் 3 பேய் , முடிவு என்ன என்பதை வெள்ளி திரையில் காணவும் .




பின் குறிப்பு : படம் பார்த்து உங்களுக்கு பயம் வரவில்லை என்றால் நீங்கள் கல்யாணமானவர் .

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

பிஸ்கோத்து தமிழ் இயக்குனர்கள் பார்க்க வேண்டிய படம் '' MAMA

பிஸ்கோத்து  தமிழ் இயக்குனர்கள் 

பார்க்க வேண்டிய படம்

'' MAMA





கருத்தை    சொல்கிறேன்  கருமாயத்தை  கான்பிக்கிறேன்  என்று படம் எடுக்கும் 

மாண்புமிகு தமிழ் இயக்குனர்கள் ( கும்கி , சமர், சகுனி , அலெக்ஸ் பாண்டியன் , நீதானே என் பொன் வசந்தம் , போடா போடி , கடல் , விஸ்வரூப இயக்குனர்கள் தயவு  செய்து காசு கொடுத்து " MAMA படத்தை தேயடரில் பார்த்து ஒரு படம் எப்படி யாக வேண்டும் கதை எப்படி இருக்க வேண்டும் என்று தமிழ் இரசிகர் கள் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன் 

சனி, 7 ஆகஸ்ட், 2010

கற்புடைய காமத்தை...!


நாம்
வெட்கம்
கடந்த
இரவுகளுக்குள்
வீழ்வோம்...!

இறுக்கி
பிணைந்து
நெற்றி
வேர்த்து...!

காமத்தின்
எல்லைகடப்போம்...!

உனக்கு
பிடித்த
நடிகையாய்,
என்னையும்..!

எனக்கு
பிடித்த
நடிகனாய்,
நீயுமென்று...

நினைத்து...
நம்
கற்புடைய
காமத்தை
காதலென்று....

நாம்
வெட்கம்
கடந்த
இரவுகளுக்குள்
வீழ்வோம்...!

புதன், 28 ஜூலை, 2010

ஒருதலைக்காமம்...



உன்னோடுகொண்ட
ஒருதலைக்காமம்...

சிந்தனைகளையும்
சிற்றின்பத்தையும்
சிதறடிக்கிறது....

உன் காதல்
சேரும்போது
என் காமம்
வெடிக்கும்...

தூங்காமல்
விழித்தபின்
என்
தலையணை
பிழிந்தால்

என்னால்
எழுதப்பட்ட
காதல்
கண்ணீர்
கவிதைகள்...

வெட்கமாயிருக்கிறது
ஒருசில
நொடிகளின்
காமத்திற்கு
காதலென்று சொல்ல....

என்றாலும்
கற்புடைய
சமூகத்தில்

என் காமமும்
உன் காமும்
ஜோடனை
வார்த்தைகளால்
காதலாகட்டுமென்று...

காத்திருக்கிறேன்.
உன் காமம் சேர..

திங்கள், 26 ஜூலை, 2010

நிதர்சனம் .....


யாராவது
யாரோடவாவது
பேசத்தான்
விரும்புகிறார்கள்...!

மௌனமாய்
மனதிற்குள்
யாரும்
இருப்பதில்லை...!

அடுத்து
வந்தால்
ஆஸ்தி
கேட்ப்பார்களோ...

என்றொரு
அவஸ்தையோடு...,
சாலைகளில்
சந்திக்கையில்
மௌனமாய்...

ஒரு
புன்னகையோடு
புதைக்கிறார்கள்
மனிதநேயத்தை...!

இருந்தாலும்
யாராவது
யாரோடவாவது
பேசத்தான்
விரும்புகிறார்கள்...!

புதன், 21 ஜூலை, 2010

கனவுகளில்

என்கனவுகளும் ...
என்கவிதைகளும்...
உன்னோடுதான்..!

காசு பார்க்க,
கடல் கடந்ததில்
தொலைத்தது...

காதலும்
காமமும்தான்...

வெட்கம் விற்று ,
அவமானம் தின்று.!

ஓடி ஓடிக்களைத்து
ஊன் உறங்கும்போது...

விழித்திருக்கும்
உணர்வுகளில்...

என்கனவுகளும் ...
என்கவிதைகளும்...
உன்னோடுதான்..!